அம்மாவின்
கருவறையில் அகதியாக
அகப்பட்ட நான்
அழுகையோடு பிறந்தேன்..
எனக்கு பாலூட்ட
என்னென்ன கஷ்டம்
கண்டாயோ?
யார் அறிவார்..?
மடியறையில்
நானுறங்க தாலாட்டிவிட்டு
தூக்கம் தடவிய
உன் கண்கள் உறங்க
மறந்து விட்டதே...!
என்னுடைய
அன்னையின் அரவணைப்பு
என் நோய்களை
நொடியில் ஓடச் செய்தது;
பசியே அறியாத
என் வயிற்றுக்கு தெரியுமா..?
தாய் தன் பசியை மறந்து
சோறு ஊட்டுவாலென்று...
வளர்ந்த பிறகும்
என்னை ஒரு
வயசுக் குழந்தையாகவே
எண்ணி விடுவாள்
என் வயதான அம்மா..
உன்னுடைய
பிரசவ வலியை
அனுபவிக்க எனக்கு
ஏழு ஜென்மங்கள்
எப்படியும் போதாதம்மா...
இப்படிப்பட்ட
அன்னையை அழுகையோடு
அழைத்து
செல்ல உரிமை உண்டா
எமனுக்கு ..?
அதனால்
தூக்கிலிடுவோம் எமனை ...எடுங்கள்
ஒரு முழம் கயிற்றை ....