Friday, October 22, 2010

ஒரு மொட்டின் கனவு...

அப்பாவும்
அம்மாவும்
"சேர்ந்து" குளிப்பாட்டுறாங்க...!
ஆபிசில்  லீவு...
மறுபடியும் எப்பம்மா
லீவு விடுவாங்க...?
அப்பாவியாய் கேட்டது குழந்தை...
இவள் முகத்தில் வழிவது
நீர்த்துளிகள் மட்டுமல்ல..
அவளின் ஏக்கத்துளிகளும்கூட ...

Wednesday, October 20, 2010

பிறக்கும் இடமும் அறியேன்..!
இறக்கும் இடமும் அறியேன்..!
நானிருக்கும் இடமும்
நலம்பெற முயல்பவன்  நானே...

நஞ்சிருக்கும் மனமும்கூட
பிஞ்சுக்குழந்தைகளின் புன்னகையில்
பஞ்சாய்ப்போனதே ..!

இருந்தவரை சேர்த்ததெல்லாம்
மருந்தாய்க்கூட மாறவில்லை ,உடல்
மண்ணைத் தேடி செல்லுமே ...
மனமிருக்கும் போதே
மனிதர்களை சேர்த்து வை...

Tuesday, October 19, 2010

இரவில்
நிலவுகூட நிம்மதியாக
தூங்குவதில்லை ...
உன் நினைவுகள் 
எப்படி தூங்கும்...

சிரத்தையோடு  நான்
சிரிக்கும் சிரிப்பை
சீக்கிரம் தெரிந்துகொள்ளலாம்
என்னை பார்த்தால்...

நண்பர்களாய் நாம்
நடந்த பாதைகளில்
புற்கள்கூட முளைத்துவிட்டது ...

என்னை கொல்வதற்கு
எதுவும் தேவையில்லை
உன் பிரிந்த நினைவுகள் போதும்...
வறுமை ...
வெறும் வார்த்தையல்ல
வெந்த உணவுக்காக
வெயிலில் அலையும்
வெறுமையான மக்கள்...


மலராத
கருமை ரோஜாக்கள்
கையேந்தி நிற்கும்போது
கடவுள் என்போன்
நிச்சயம் கண்கள்
இழந்தவன்தான்...


ஆசை
வெறும் அகராதியில் மட்டும்
பார்க்கும் பாவ ஜனங்கள்...
ஒரு பக்கம்
சொர்க்கக் கூடுகள்...
மறுபக்கம்
சுருங்கிய கோடுகள்...

Monday, October 18, 2010

என்னை விட்டு விடு

பத்து மாதம்
பரிதவித்து பாசத்தோடு
பெற்றெடுத்த அன்னை...

பஸ் பாஸ்
கேட்ட எனக்கு
ஆசையாக பைக்
வாங்கிதந்த தந்தை...

என்னை எப்போதும்
காப்பாற்றும் சகோதரி...

என் கஷ்டத்தின்
கண்ணீரை  துடைக்க வரும்
நல்ல நண்பர்கள்...

இவர்களை      
கண்ணீரோடு கரைய
வைத்துவிட்டு உன்னோடு
ஓடி வாழ
என் இதயம்
விரும்பாதடி...


Sunday, October 17, 2010

கொலைகாரன்

அவளை காதலித்ததால்
நானொரு கொலைகாரன்...
தினமும் என்
இரவுகளைத் தின்னும்
உன் நினைவுகளை
கொல்வதால்....

Friday, October 15, 2010

என்னவளின்
இதழ்கள் தினமும்
இரவல் வாங்கப்படுகின்றன...
பூத்திருக்கிறது ரோஜா...

Sunday, September 26, 2010

வறுமை


ஒட்டிய
கன்னங்களுக்கு தெரியாது..
தினமும் வயிறு
தின்பது ஈரத்துணியை
மட்டுமதான் என்று ...

Saturday, June 12, 2010

என் பேனா....
கவிதை எழுத நினைத்தேன்..!
எதைப்பற்றி..?
யோசித்தேன்..! தலைப்பு
ஈழத் தமிழர்களின் அவலநிலை;
எழுதிய போது பேனா கசிந்தது..!
என் பேனாவுக்கும் உணர்ச்சிகள்...!

ஒரு முழம் கயிறுஅம்மாவின்
கருவறையில் அகதியாக
அகப்பட்ட நான்
அழுகையோடு பிறந்தேன்..

எனக்கு பாலூட்ட
என்னென்ன கஷ்டம்
கண்டாயோ?
யார் அறிவார்..?
மடியறையில்
நானுறங்க தாலாட்டிவிட்டு
தூக்கம் தடவிய
உன் கண்கள் உறங்க
மறந்து விட்டதே...!
என்னுடைய
அன்னையின் அரவணைப்பு
என் நோய்களை
நொடியில் ஓடச் செய்தது;

பசியே அறியாத
என் வயிற்றுக்கு தெரியுமா..?
தாய் தன் பசியை மறந்து
சோறு ஊட்டுவாலென்று...

வளர்ந்த பிறகும்
என்னை ஒரு
வயசுக் குழந்தையாகவே
எண்ணி விடுவாள்
என் வயதான அம்மா..

உன்னுடைய
பிரசவ வலியை
அனுபவிக்க எனக்கு
ஏழு ஜென்மங்கள்
எப்படியும் போதாதம்மா...

இப்படிப்பட்ட
அன்னையை அழுகையோடு
அழைத்து
செல்ல உரிமை உண்டா
எமனுக்கு ..?
அதனால்
தூக்கிலிடுவோம் எமனை ...எடுங்கள்
ஒரு முழம் கயிற்றை ....